sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ. தொழில்நுட்ப வகுப்பு; ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஏ.ஐ. தொழில்நுட்ப வகுப்பு; ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஏ.ஐ. தொழில்நுட்ப வகுப்பு; ஆசிரியர்களுக்கு பயிற்சி


UPDATED : நவ 26, 2025 07:47 AM

ADDED : நவ 26, 2025 07:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2025 07:47 AM ADDED : நவ 26, 2025 07:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:
தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 'செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் இணையக் கருவிகள் அறிவுத் திட்டம்' (டி.என்., ஸ்பார்க்) துவக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,), கோடிங், இணையக் கருவிகள் குறித்த வகுப்புகள் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏ.ஐ., தொழில்நுட்ப வகுப்பு நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கவும் விருப்பம் கோரப்பட்டுள்ளது.

அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:


'ைஹடெக் லேப்' கொண்ட குறிப்பிட்ட சில அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான இ--மெயில் பள்ளிக் கல்வித்துறை வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. அதில், செயற்கை நுண்ணறிவு குறித்த ஆன்லைன் பயிற்சிக்கு விருப்பம் உள்ள ஆசிரியர்கள், பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த பாடங்கள் இல்லாத காரணத்தால் ஆசிரியர்கள் விருப்பம் தெரிவிக்காமல் உள்ளனர். அடுத்த கல்வியாண்டில், செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டால், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெறுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us