sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொறியியல் பயன்பாட்டு மையம்

300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொறியியல் பயன்பாட்டு மையம்

300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொறியியல் பயன்பாட்டு மையம்


UPDATED : ஆக 23, 2024 12:00 AM

ADDED : ஆக 23, 2024 08:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2024 12:00 AM ADDED : ஆக 23, 2024 08:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவையில், பொறியியல் பயன்பாட்டு மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தொழில், கல்வி நகரமான கோவையில் உற்பத்தி, ஆராய்ச்சி, கல்வி, தொழில் அனைத்து பிரிவினருக்கும் பயன்படும் வகையில், பொறியியல் பயன்பாட்டு மையம், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பிரமாண்டமாக விரைவில் அமையவுள்ளது.

இதற்காக, கோவை அண்ணா பல்கலை வளாகத்தின் வட கிழக்கு பகுதியில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், டிட்கோ மற்றும் அண்ணா பல்கலை மண்டல வளாகம் இணைந்து, இம்மைய பொறுப்பாளர்களாக செயல்படவுள்ளனர்.

இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில், கட்டுமான பணி துவங்குவதற்கான குறியீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்துாரி, சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கிவைத்தார். ஒரு வாரத்தில் கட்டுமான பணிகள் துவங்கும் என, அண்ணா பல்கலையின் கோவை மண்டல வளாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us