UPDATED : அக் 28, 2025 08:18 AM
ADDED : அக் 28, 2025 08:20 AM
வால்பாறை:
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 16வது பட்டமளிப்பு விழா முதல்வர் ஜோதிமணி தலைமையில் நடந்தது.
விழாவில், பாரதியார் பல்கலைகழக பதிவாளர் ராஜவேல் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
இயற்கையான சூழலில், மாணவர்கள் கல்வி கற்பது என்பது எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பாகும். எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டு, அதன் படி நல்ல முறையில் படித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.
ஏழை, எளிய மாணவர்கள் படிக்க, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, 'நான் முதல்வன்' திட்டம், 'புதுமைப்பெண்' போன்ற திட்டங்களால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
மலை கிராமத்தில் படிக்கும் மாணவர்கள், தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய உயர்கல்வி படிப்பது மிக அவசியம். கல்வியால் மட்டுமே மாணவன் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில் மொத்தம், 222 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கல்லுாரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

