sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில நல்லாசிரியர் விருது நேர்காணல் 35 பேர் பங்கேற்பு; குறையும் ஆர்வம்

மாநில நல்லாசிரியர் விருது நேர்காணல் 35 பேர் பங்கேற்பு; குறையும் ஆர்வம்

மாநில நல்லாசிரியர் விருது நேர்காணல் 35 பேர் பங்கேற்பு; குறையும் ஆர்வம்


UPDATED : செப் 03, 2024 12:00 AM

ADDED : செப் 03, 2024 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2024 12:00 AM ADDED : செப் 03, 2024 10:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் நேர்காணல் நடந்தது.

மாவட்டத்தில் 35 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு சி.இ.ஓ., தலைமையில் 8 பேர் கொண்ட குழு நேர்காணல் நடத்தியது. அனுபவம், கற்றல் கற்பித்தலில் சாதனைகள், மாணவர்கள், பள்ளிக்கு பயன்படும் செயல்பாடுகள் உள்ளிட்ட தகுதிகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் 26 பேர் இறுதி செய்யப்பட்டு இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறைந்து வரும் ஆர்வம்


இந்தாண்டு 35 பேர் மட்டுமே விண்ணப்பித்த நிலையில் மாநில அளவில் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் ஆசிரியர்களிடையே குறைந்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:


விருது பெற அரசியல், அதிகாரிகள் சிபாரிசு தேவை என்ற எண்ணம் ஆசிரியர்களிடையே மேலோங்கியுள்ளது. விருது பட்டியலில் விண்ணப்பிக்காதவர் பெயர் கூட வெளியாகிய குற்றச்சாட்டும் உள்ளது. இதை தாண்டி தகுதி, அனுபவம் அடிப்படையில் சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் தகுதியுள்ள ஆசிரியர்கள் பலர் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தாண்டு எமிஸ் மூலம் விண்ணப்பித்த நடைமுறை பாராட்டத்தக்கது. விருது பெறுவதற்கான ஆசிரியர்களின் ஆர்வத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us