ஜன 10, 2026 10:50 AM
ஜன 10, 2026 10:50 AM

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.எப்.டி.,) 2026-27ம் கல்வியாண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இக்நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பு, மேலாண்மை, தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத்தேர்வு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை ஜன., 13 வரை நீட்டித்துள்ளது. தாமத கட்டணத்துடன் விண்ணப்பிக்க ஜன., 14 முதல் 16 வரை அவகாசம் வழங்கியுள்ளது.
நுழைவு தேர்வு பிப்ரவரி 8ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு என்.டி.ஏ., மூலம் நாடு முழுவதும் உள்ள 102 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.
மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் விதிமுறைகளை, https://exams.nta.nic.in/niftee/ என்ற இணையதள மூலம் தெரிந்து கொள்ளலாம்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

