தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/என்.சி.எச்.எம்.ஜே.இ.இ.,

என்.சி.எச்.எம்.ஜே.இ.இ.,

என்.சி.எச்.எம்.ஜே.இ.இ.,


ஜூன் 15, 2021 12:00 AM

ஜூன் 15, 2021 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 15, 2021 12:00 AM ஜூன் 15, 2021 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் வழங்கப்படும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் சார்ந்த படிப்புகளின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தும் நோக்கில் ’நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’ வாயிலாக நடத்தப்படும் நுழைவுத்தேர்வே, ’நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்‌ஷாமினேஷன்’!
அறிமுகம்:
மத்திய அரசின் கீழ், 1982ம் ஆண்டு துவங்கப்பட்ட 'நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி’ என்ற  அமைப்பு, நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசு நிதியுதவி பெறும் 21 கல்லூரிகள், மாநில அரசு நிதியுதவி பெறும் 26 கல்லூரிகள், 26 தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒரு பொதுத்துறை கல்வி நிறுவனம் ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளின் பாடத்திட்டங்களை அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. இந்த கல்வி நிறுவனங்களின் மூலம் சான்றிதழ், டிப்ளமா, முதுநிலை டிப்ளமா, இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் என 11 தொழில்முறை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முக்கிய படிப்புகள்:
* பி.எஸ்சி., இன் ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் -ஜெனரிக்/ஸ்பஷலைசேஷன்* எம்.எஸ்சி., இன் ஹாஸ்பிடாலிட்டி அட்மினிஸ்ட்ரேஷன்* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் டயடிக்ஸ் அண்ட் ஹாஸ்பிட்டல் புட் சர்வீஸ்* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் அக்காமடேஷன் ஆப்ரேஷன்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட்* டிப்ளமா இன் புட் புரடக்‌ஷன் / புட் அண்ட் பிவரேஜ் சர்வீஸ் / பேக்கரி அண்ட் கன்பக்‌ஷனரி/ பிரன்ட் ஆபீஸ் ஆப்ரேஷன் / ஹவுஸ்கீப்பிங் ஆப்ரேஷன்* கிராப்ட்ஸ்மான்ஷிப் சர்டிபிகேட் கோர்ஸ் இன் புட் புரொடக்‌ஷன் / புட் அண்ட் பிவரேஜ் சர்வீஸ்
சேர்க்கை முறை:
என்.சி.எச்.எம்.சி.டி., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற மாணவர்கள் ‘நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி’ நடத்தும் என்.சி.எச்.எம்.ஜே.இ.இ.,  என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். முதுநிலை படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறைகள்: 
நியுமெரிக்கல் எபிலிட்டி அண்ட் அனலிட்டிக்கல் ஆப்டிடியூட், ரீசனிங் அண்ட் லாஜிக்கல் டிடக்‌ஷன், ஜெனரல் நாலெஜ் அண்ட் கரண்ட் அபயர்ஸ், இங்கிலீஷ் லேங்குவேஜ் மற்றும் ஆப்டிடியூட் பார் சர்வீஸ் செக்டர் ஆகிய 5 பிரிவிகளின் கீழ் மொத்தம் 200 கேள்விகள் 'அப்ஜெக்ட்டிவ்’ முறையில் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் அதேநேரம் தவறான ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படுகிறது.
தேர்வு நேரம்:
3 மணிநேரங்கள்
தகுதிகள்:
இளநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வை எழுத குறைந்தது 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 25 வயதிற்கும் குறைவாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
http://nchm.nic.in மற்றும் https://nchmjee.nta.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us