தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/விர்ச்சுவல் லேப் வாயிலாக உயிரோட்டமான செயல்முறை பயிற்சி!

விர்ச்சுவல் லேப் வாயிலாக உயிரோட்டமான செயல்முறை பயிற்சி!

விர்ச்சுவல் லேப் வாயிலாக உயிரோட்டமான செயல்முறை பயிற்சி!


ஆக 24, 2020 12:00 AM

ஆக 24, 2020 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 24, 2020 12:00 AM ஆக 24, 2020 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவிட்-19 காரணமாக தொழில்நுட்ப ரீதியிலான கல்வி முறைக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. ஆன்லைன் கல்வி முறையில் நன்மை, தீமை என இரண்டும் கலந்துள்ளது.
உலகமயமாக்கலை இன்றைய ஆன்லைன் கல்வி வாயிலாக மாணவர்கள் நன்கு உணர துவங்கியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் பல காலமாக பின்பற்றப்பட்டு வரும் கல்வி முறை போன்று நமது கல்வி முறையும் மாறத்துவங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. வீட்டில் இருந்தபடியே மாணவர்களால் ஆன்லைன் மூலம் தங்கள் கல்வித்திறனை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. இருந்தபோதிலும், கல்லுாரிகளில் நடைபெறும் வகுப்புகளைப் போன்று நீண்ட நேரம், மாணவர்களால், ஆன்லைன் வழி கல்வியில் நடைபெறும் வகுப்புகளை கவனிக்க முடிவதில்லை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சில பிரச்னைகளை அவர்கள் சந்திக்க வாய்ப்புள்ளது. 
பொதுவாக, பேராசிரியர்களுக்கும் கல்லுாரி வகுப்பறையில் பாடம் நடத்தத்தான் அதிக ஆர்வம் இருக்கும். கல்லுாரி சூழலில், சக மாணவரகளுடன் கற்பது என்பது ஆன்லைன் முறையில் சாத்தியமில்லை. மாணவர்கள் இல்லாமல் கல்லுாரிகளும், வகுப்பறைகளும் சோகமாகத் தான் உள்ளன.
குறிப்பாக, ஆன்லைன் வழி கல்வியில், செய்முறை பாடங்களை தொழில்நுட்ப ரீதியாக மாணவர்கள் உணர்ந்து கற்க முடியாது. இவ்வாறு பல சிக்கல்கள் இருந்தாலும் இப்போதைய சூழலில், ஆன்லைன் வழி கல்வி தான் கற்பித்தலுக்கும், கற்றலுக்குமான பாலமாக உள்ளது. வகுப்புகள் மட்டுமின்றி தேர்வுகளையும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்துவதும் தற்போது சாத்தியமாகி உள்ளது. கல்லுாரிகள் வழக்கம்போல் செயல்படும் காலக்கட்டத்தில் இருக்கும் மாணவர்களின் வருகை பதிவு போன்று, ஆன்லைன் கல்விமுறையிலும் மாணவர்களின் பங்கேற்பு 97–98 சதவீதம் வரை இருப்பது ஆச்சரியமான ஒன்று. 
டிஜிட்டல் கல்வியால் மாணவர்கள் பன்முக செயல் திறன் உடையவர்களாக திகழ்கின்றார்கள். வெளிநாடுகளில் மாணவர்கள் ஒரு நாளைக்கு, 3 மணி நேரம் கல்வி கற்கின்றனர். அதன் வாயிலாக புதிய கண்டுபிடிப்புகள், யோசனைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தேடுகின்றனர். இப்போது நமது மாணவர்களுக்கும் டிஜிட்டல் கல்வி அதை நோக்கி பயணிக்க உந்துகோலாக அமைகிறது. டிஜிட்டல் வழியில் கற்பிக்க ஆசிரியர்களும் துரிதமாக தயார்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டயமாகும். 
இன்றைய மாணவர்கள் டிஜிட்டல் வழி கல்வி கற்பதில் ஆர்வமாகவும், டிஜிட்டல் கருவிகளை கையாள்வதில் சிறந்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்க, எங்கள் கல்லூரியில் பிரத்யேக திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று செயல்முறை பயிற்சிகளை மாணவர்கள் உயிரோட்டத்துடன் கற்றுக்கொள்ள ‘விர்ச்சுவல் லேப்’ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
-கிருஷ்ணகுமார், செயலாளர், நேரு கல்விக் குழுமம், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us