தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வளரிளம் பருவமும்... உறவாடல் திறனும்...

வளரிளம் பருவமும்... உறவாடல் திறனும்...

வளரிளம் பருவமும்... உறவாடல் திறனும்...


ஜூன் 11, 2020 12:00 AM

ஜூன் 11, 2020 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 11, 2020 12:00 AM ஜூன் 11, 2020 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தப் பருவத்தில்தான் உடல் மற்றும் மன வளர்ச்சியில் பெரும் மாற்றங்கள் அனைத்தும் நிகழும். உடலில் உள்ள உணர்வுகள் அதிகமாக வெளிப்படும் காலமும் இந்த வளரிளம் பருவம்தான். 
ஒவ்வொருவரும் இந்த கால கட்டத்தில் தன்னுடைய முழு வாழ்க்கைக்குத் தேவையான ஆக்கப் பூர்வமான செயல்களைத் திட்டமிட்டு பலமான அடித்தளத்தை அமைத்துக்கொள்ளவேண்டும். 
அதற்கு மிக முக்கியமானதும், உதவியாக இருப்பதும் உறவாடல் திறனாகும். இந்த உறவாடல் திறனை (Communication Skill) கவனமாக கையாண்டால் வளரிளம் பருவம் வரமாக அமைந்துவிடும். கவனக் குறைவாக அல்லது தவறாகக் கையாண்டால் வளரிளம் பருவம் மட்டுமல்ல வாழ்க்கையே சாபமாக அமைந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. 
உறவாடல் திறன் என்றால் என்ன? அதை எப்படி வளரிளம் பருவத்தினர் வளர்த்துக்கொள்வது, கையாள்வது? 
உறவாடல் அல்லதுதொடர்பாடல் என்பது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தகவலை கடத்துவதாகும். இது பெரும்பாலும் மொழிவழியாக நடைபெறுகிறது. 
பேச்சு, எழுத்து, கருத்துக்கள், சிந்தனைகளின் பரிமாற்றம் அல்லது அறிவித்தல் ஆகிய தொடர்புகளைக் குறிக்கின்றது. கற்கால ஆதி மனிதன் வாழ்வில் உறவாடல் என்பது கை, கால் அசைவில்... ஓசையில், ஒழி எழுப்புதலில் ஓவியத்தில் மட்டுமே அமைந்திருந்தது. 
ஆனால் ... இன்றோ... மனிதனின் கையில் ஆயிரமாயிரம் அறிவியல் கருவிகள் நுட்பங்கள் குவிந்து கிடக்கின்றது.  அதனால் உறவாடல் என்பது எளிதானதாகத் தெரியும். எதை புறந்தள்ளுவது எதை ஏற்றுக்கொள்வது என்ற குழப்பம் ஏற்படுகிறது.அதுவும் வளரிளம் பருவத்தினருக்கு இது பெரும் சவாலாகவே உள்ளது. 
கேட்கும் திறன், கூர்ந்து கவனிக்கும் திறன், பேச்சுத் திறன், கேள்வி கேட்கும் திறன், ஆராயும் திறன், மதிப்பிடும் திறன், தான் நினைப்பதை தனக்கும், பிறருக்கும் உணர்த்தும் திறன் இவையெல்லாம் சரியாக நடந்தால் உறவாடல் முறையாக இருக்கும். அதனால் பயன் விளையும். இவற்றில் ஏதேனும் ஒன்று சரியில்லாமல் போனாலும் பயன் விளையாமல் போவதோடு பாதிப்பும் ஏற்படும். 
மனிதன் குடும்பமாக, குழுவாக, கூடமாக சேர்ந்து வாழும் இயல்புடையவன். அதனால் உறவாடலில் குழப்பம் வரவும், தவறுகள் நேரவும் அதிக வாய்ப்பிருக்கிறது. ஆகவே நம்மோடு உறவாடும் நபர் யார்? எதற்காக இவரோடு உறவாடலைத் தொடரவேண்டும்? அந்த உறவாடல எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? என்பதை கவனத்தில் வைத்து கொண்டு உறவாடினால் எந்த சூழலிலும் ஆபத்து நேராது. 
வளரிளம் பருவத்தை “ரெண்டும் கேட்டான் பருவம்” என கிராமத்து மொழியில் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆம்! அது உண்மைதான். ஏனெனில் வளரிளம் பருவத்தில் இயல்பாகவே சில பிரச்சனைகள் வருவதுண்டு. அந்தப் பிரச்சனைகளை பெற்றோரிடமோ, நமது நம்பிக்கைக்கு உரியவரிடமோ கேட்டுத் தெளிவு பெற்றால் வளரிளம் பருவத்தை மகிழ்ச்சியுடன் கடந்து செல்லலாம். 
• மற்றவர்களிடம் அனுசரித்துப் போவதில் உள்ள மாற்றங்கள் (இந்த வயதில் தான் செய்வதுதான் சரியென்று தோன்றும்) • பெண்களுக்கு மார்பக வளர்ச்சி, பூப்படைதல், (இதனால் ஏற்படும் உதிரப்போக்கு  மன அழுத்தத்தை உண்டாக்கும்)• படிப்பில் நாட்டமில்லாமல் போவது. பள்ளி கல்லூரியை விட்டு இடை நிற்றல். • எதிர் பாலின ஈர்ப்பு, காதல் வயப்படுதல், பாலியல் தடுமாற்றங்கள், தவறான நம்பிக்கைகள். • சரியான வழிகாட்டுதல் இல்லை என்பதால் தற்கொலை எண்ணம், அதற்காக முயற்சி செய்தல்.• தவறான நண்பர்களை தேர்வு செய்வதால் போதைப் பொருள் பழக்கம். • சமூக வலைத்தளம் மற்றும் சினிமா தாக்கம் • முறையான வழிகாட்டுதல் இல்லாமல் சமுக விரோத செயல்களில் ஈடுபடுதல். • ஆழ் மனப் பிரச்சனைகளால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் (சோர்வு, உடல் பருமன், தூக்கமின்மை, முறையற்ற உணவுப் பழக்கம்) 
இப்படிப் பல சிக்கல்கள் வளரிளம் பருவத்தினரை மிரட்டினாலும் இவற்றிலிருந்து தப்பித்து.... தாண்டி தன்னை காத்துக் கொண்டு எந்தத் துறையில் கால்பதித்து வாழ்க்கையில் எப்படி உயர்வது, முன் நேருவது என்பதற்கு உறவாடல் திறன் மிக முக்கியப் பங்காற்றுகிறது. கணிப்பொறியை கையாள்வது, சமூக ஊடகங்களை முறையாக பயன்படுத்துவது எல்லாம் இருபத்தியோராம் நூற்றாண்டுகளுக்கான அத்தியாவசியமான திறந்களாக இருப்பதால் அவற்றை முறையாக பயன்படுத்த குழந்தைகளை நெறிப்படுத்தவேண்டும். 
குறிப்பாக பேரிடர் காலங்களில் அதுவும் தற்பொழுத் உலகையே அச்சுறுத்திவரும் கொவியட் வைரஸ் பாதிப்பால் ஊரடங்கும் தனித்திருத்தலும் அவசியமாக உள்ளது. இச்சூழலில் வளரிளம் பருவத்தினர் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு எளிதில் ஆளாவர்.  எனவே வளரிளம் பருவத்தினரின் உறவாடல் பெரும்பாலும் பெற்றோர்கள், உறவினர், ஆசிரியர்கள், சமூகம் என அனைவரோடும் பங்கேற்கின்றனர். 
இவர்கள் அனைவரும் வளரிளம் பருவத்தினரின் இயல்பைப் புரிந்துகொண்டு நெறிப்படுத்தவேண்டும், நட்புணர்வோடு செயல்பட்டு அவர்களைப் பாதுகாக்கவேண்டும். 
-மு.கலைவாணன், கலை அறப்பேரவை, சென்னை 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us