தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அறிவோம் என்.ஐ.டி.டி.டி.ஆர்.சி.,

அறிவோம் என்.ஐ.டி.டி.டி.ஆர்.சி.,

அறிவோம் என்.ஐ.டி.டி.டி.ஆர்.சி.,


மார் 11, 2020 12:00 AM

மார் 11, 2020 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 11, 2020 12:00 AM மார் 11, 2020 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழில்நுட்பக் கல்வியின் 
தரத்தை உயர்த்தும் 
நோக்கில் மத்திய 
மனிதவள மேம்பாட்டு 
அமைச்சகத்தின் கீழ், 
1960ம் ஆண்டுகளில் 
ஏற்படுத்தப்பட்ட நேஷனல் 
இன்ஸ்டிடியூட் ஆப்  
டெக்னிக்கல் டீச்சர்ஸ் 
டிரைனிங் அண்டு ரிசர்ச், 
நாட்டின் பல்வேறு 
பகுதிகளில் 
செயல்படுகிறது.


முக்கிய செயல்பாடுகள்:
ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி, பாடத்திட்ட மேம்பாடு, குறுகியகால பயிற்சிகள், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நிறுவனங்களுக்கான சேவை மற்றும் ஆலோசனை ஆகிய பல்வேறு பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 
பிரதான மையங்கள்: 
சென்னை, சண்டிகர், கொல்கத்தா மற்றும் போபால். 
நீட்டிப்பு மையங்கள்:
 பெங்களூரு, ஐதராபாத், கலமசேரி, விஜயவாடா, குவகாத்தி, புவனேஸ்வர், புனே, பனாஜி, அகமதாபாத் மற்றும் ராய்ப்பூர்.
வழங்கப்படும் படிப்புகள்: 
இந்நிறுவனம் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதியுடனும், பல்கலைக்கழக அங்கீகாரத்துடனும் பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை வழங்குகிறது.
முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.இ., - இன்பிராஸ்டரக்சர் இன்ஜினியரிங் அண்டு மேனேஜ்மெண்ட்எம்.இ., - ஸ்டரக்சர் இன்ஜினியரிங் எம்.இ., - அட்வான்ஸ்டு புரொடக்‌ஷன் சிஸ்டம்ஸ்எம்.இ., - கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் (இன்டர்நெட் ஆப் திங்ஸ்)எம்.இ., - எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்)எம்.இ., - மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (ரோபாட்டிக்ஸ்)எம்.இ., - மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (மானுபாக்சரிங் டெக்னாலஜி)எம்.இ., - சிவில் இன்ஜினியரிங் (கன்ஸ்டரக்‌ஷன் டெக்னாலஜி அண்டு மேனேஜ்மெண்ட்)எம்.இ., - கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் எம்.இ., - எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் கன்ட்ரோல்)எம்.இ., - எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் எம்.டெக்., - கம்ப்யூட்டர் டெக்னாலஜி அண்டு மேனேஜ்மெண்ட்எம்.டெக்., - கன்ஸ்ட்ரக்‌ஷன் டெக்னாலஜி அண்டு மேனேஜ்மெண்ட்
ஆராய்ச்சி படிப்புகள்:
இன்ஜினியரிங் எஜுகேஷன், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் உட்பட பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
குறுகியகால படிப்புகள்: 
ஆசிரியர்கள், தொழில் நிறுவன பணியாளர்கள், பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கு தேவையைப் பொறுத்து அவ்வப்போது பல்வேறு பிரிவுகளில் குறுகிய கால படிப்புகளை என்.ஐ.டி.டி.டி.ஆர்., வழங்குகிறது.
விபரங்களுக்கு:
 https://www.nitttrc.ac.in/ , http://www.nitttrchd.ac.in/ , http://www.nitttrkol.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us