sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ சி.யூ.இ.டி., யு.ஜி., - 2024

சி.யூ.இ.டி., யு.ஜி., - 2024

சி.யூ.இ.டி., யு.ஜி., - 2024


ஏப் 09, 2024 12:00 AM

ஏப் 09, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 09, 2024 12:00 AM ஏப் 09, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் குறிப்பாக அரசு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய தேர்வு, காமன் யுனிவர்சிட்டி எண்ட்ரன்ஸ் டெஸ்ட் - சி.யூ.இ.டி.,!
இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை இத்தேர்வுகளை நடத்துகின்றன.

அறிமுகம்
சி.யூ.இ.டி., - யு.ஜி., எனும் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு வாயிலாக, மத்திய பல்கலைக்கழகங்கள், நாடு முழுவதும் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பிற பங்கேற்கும் நிறுவனங்களில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தகுதிகள்:
12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்வு எழுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு ஏதும் இல்லை.
தேர்வு முறை:
இத்தேர்வு ஹைப்ரிட் முறையில், சி.பி.டி., எனும் கணினி அடிப்படையிலான தேர்வு அல்லது பேனா, காகித முறையிலான தேர்வாக நடத்தப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான பதிவுகளைக் கொண்ட பாடங்களுக்கு, ஆப்டிகல் மார்க் ரெகக்னிஷன் - ஓ.எம்.ஆர்., வடிவத்தை பயன்படுத்தி பேனா மற்றும் காகித முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. மற்றவர்களுக்கு கணினி அடிப்படையிலானதாக நடத்தப்படுகிறது.
பாடத்திட்டம்:
மொழி பாடம், துறை சார்ந்த பாடம் மற்றும் பொது தேர்வு ஆகிய பாடங்கள் இடம் பெறும். பொது தேர்வை பொறுத்தவரை, பொது அறிவு, சமீப நிகழ்வுகள், பொது மனத்திறன், எண் திறன், குவாண்டிடேட்டிவ் ரீசனிங், லாஜிக்கல் அண்டு அனலெட்டிக்கல் ரீசனிங் ஆகிய பகுதிகளில் இருந்து கேளிவிகள் கேட்கப்படுகிறது. கேள்விகள் அனைத்தும் 'மல்டிபில் சாய்ஸ்' வடிவில் இடம்பெறும்.
தேர்வு மொழி:
ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு மையம்:
வெளிநாட்டில் உள்ள 26 நகரங்கள் உட்பட 380 நகரங்களில் உள்ள மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
விபரங்களுக்கு:
https://cuetug.ntaonline.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us