/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை 2026
/
காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை 2026
செப் 03, 2025 12:00 AM
செப் 03, 2025 12:00 AM

யு.கே., பல்கலைக்கழகத்தில் முழுநேர முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் இந்திய மாணவ, மாணவிகள் 'காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன்' வழங்கும் 'காமன்வெல்த் மாஸ்டர்ஸ்', உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை விபரம்:
முழு கல்விக் கட்டணம், யு.கே., சென்று வர விமானக் கட்டணம் உணவு மற்றும் தங்குமிட செலவினங்களுக்காக மாதம் 1,781 பவுண்டுகள் வரையிலும் உதவித்தொகையாக வழங்படுகிறது.
தகுதிகள்:
* இந்திய குடிமகனாகவும், உள்நாட்டிலேயே நிரந்தரமாக வசிப்பவராகவும் இருத்தல் அவசியம்.
* செப்டம்பர் 2026 நிலவரப்படி, குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்பவராக இருத்தல் வேண்டும் அல்லது குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்பவராக இருத்தல் வேண்டும்.
* உதவித்தொகை இன்றி யு.கே.,வில் படிக்க இயலாத அளவில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவராக இருத்தல் வேண்டும். குறிப்பாக, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* இந்தாண்டு நவம்பர் 30ம் தேதிக்குள் உதவித்தொகைக்கு தகுதியான ஏதேனும் ஒரு யு.கே., பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை பெற வேண்டும்.
* பொதுவாக, எம்.பி.ஏ., படிப்பு மற்றும் இரண்டாவது முதுநிலை பட்டப்படிப்பிற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுவதில்லை.
தலைப்புகள்:
* வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
* சுகாதார அமைப்புகள் மற்றும் முறைகளை மேம்படுத்துதல்
* புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவை ஊக்குவித்தல்
* உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல்
* மீள்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் நெருக்கடிகளை கையாளுதல்
* அணுகல், சேர்த்தல் மற்றும் வாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
https://proposal-sakshat.samarth.edu.in/ எனும் மத்திய கல்வி அமைச்சகத்தின் சக்ஷத் போர்ட்டல் மற்றும் https://cscuk.fcdo.gov.uk/apply/ எனும் காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றின் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
சக்ஷத் போர்ட்டல் - நவம்பர் 30
காம்ன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் - அக்டோபர் 14
விபரங்களுக்கு:
https://www.education.gov.in/scholarships