/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
விண்வெளியை நேசிக்கும் மாணவர்களுக்கு ஏரோஸ்பேஸ்
/
விண்வெளியை நேசிக்கும் மாணவர்களுக்கு ஏரோஸ்பேஸ்
ஆக 12, 2025 12:00 AM
ஆக 12, 2025 12:00 AM

விமானங்கள்,
ஏவுகணைகள், ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் போன்றவைகளை வடிவமைத்து
மேம்படுத்தும் தொழில்நுட்ப துறை, 'ஏரோஸ்பேஸ் பொறியியல்'.
எதிர்காலத்தில்
விண்வெளி சுற்றுலா, ஹைபர்சோனிக் விமானங்கள் உள்ளிட்ட பல புதிய வாய்ப்புகளை
உருவாக்கும் துறையாக இது திகழ்கிறது. அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு
இது ஒரு சிறந்த தேர்வாக அமையும்.
படிப்பு விவரங்கள்
இத்துறையில்,
4 ஆண்டு காலம் கொண்ட இளநிலை பொறியியல் படிப்பாக (பி.இ., / பி.டெக்.,) பல
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 2
ஆண்டு முதுநிலை படிப்பு (எம்.இ., / எம்.டெக்., ) மேற்கொண்டு, பிஎச்.டி.,
படிப்பிலும் செல்லலாம்.
பாடத்திட்டம்
இந்த
படிப்பில் ஏரோடைனமிக்ஸ் (விமான இயக்கவியல்), புரொபல்சன் சிஸ்டம்ஸ்
(உந்துசக்தி அமைப்புகள்), ஏர்கிராப்ட் ஸ்ட்ரக்சர்ஸ் (விமான கட்டமைப்பியல்),
விமான இயக்கவியல், மெட்டீரியல் சயின்ஸ், ஏவியானிக்ஸ் போன்ற பாடங்கள்
கற்பிக்கப்படுகின்றன. கணிதம், இயற்பியல் ஆகியவை முதன்மையான அடித்தளத்
துறைகளாகும்.
தகுதி
12ம்
வகுப்பு முடித்து கணிதம், இயற்பியல் மற்றும் ரசாயனவியல் பாடங்களில் சிறந்த
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஐ.ஐ.டி., மற்றும் தேசிய அளவிலான
கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஜே.இ.இ., மெயின் அல்லது அட்வான்ஸ்டு
அடிப்படையிலேயே நடைபெறுகிறது.
வேலைவாய்ப்புகள்
நமது
தேசிய பாதுகாப்பிலும், விண்வெளி ஆராய்ச்சிகளிலும் முக்கிய பங்கு
வகிக்கிறது. இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., எச்.ஏ.எல்., போன்ற நிறுவனங்கள் ஏரோஸ்பேஸ்
பொறியாளர்களை அதிக அளவில் நியமிக்கின்றன. விமானப் பயணங்கள் வளர்ச்சி
பெறும் நிலையில், இந்தத் துறையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தனியார் நிறுவனங்களிலும் பணியாற்ற வாய்ப்பு பெறலாம். விமான வடிவமைப்பாளர்,
ராக்கெட் இன்ஜினியர், சோதனை வானூர்தி நிபுணர், ரீசர்ச் சயன்டிஸ்ட்,
ஏவியனிக்ஸ் இன்ஜினியர் என பல்வேறு பணித்துறை வாய்ப்புகள் உள்ளன.