ஷாலிமார் பாக்கில் மாணவர் மீது தாக்குதல் வாலிபர் கைது
ஷாலிமார் பாக்கில் மாணவர் மீது தாக்குதல் வாலிபர் கைது
ADDED : மார் 03, 2026 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : டில்லியில், அரசு பள்ளி ஒன்றில், 17 வயது சிறுவனை கத்தியால் குத்தியது தொடர்பாக, 21 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம், 23ம் தேதி, வட மேற்கு டில்லியின் ஷாலிமார் பாக் போலீஸ் நிலைய எல்லையில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, சுமீத் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரால், 17 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டான்.
படுகாயம் அடைந்த அந்த மாணவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக அந்த சிறுவனை, சுமீத் மற்றும் கும்பல் கத்தியால் குத்தியதாக, அவருடன் படிக்கும், 16 வயது சிறுவன் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணை நடத்திய போலீசார், சுமீத், 21, என்பவரை நேற்று கைது செய்துள்ளனர். பிறரை தேடி வருகின்றனர்.

