ADDED : ஏப் 14, 2024 06:38 AM

கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த ஒரு மாதமாக காங்கிரஸ் மற்றும் ராகுலையே கடுமையாக விமர்சித்து வருகிறார். பா.ஜ., மற்றும் பிரதமர் மோடியை விமர்சிக்காமல் தவிர்க்கிறார். இதற்கு காரணம் என்ன?
சதீசன்
கேரள எதிர்க்கட்சி தலைவர்,
காங்கிரஸ்
ஓவைசிக்கு பணம் ஏது?
பா.ஜ.,வும், அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்.,மும் கூட்டாளிகள். பா.ஜ., ஹிந்துக்களையும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., முஸ்லிம்களையும் துாண்டிவிடுகின்றன. அதே சமயம் இருவரும் ஒன்றாக வேலை செய்கின்றனர். ஓவைசிக்கு பணம் எங்கே இருந்து வருகிறது?
திக்விஜய் சிங்
மூத்த தலைவர், காங்கிரஸ்
மோடியே காரணம்!
ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தாலும், பிரதமர் மோடி இல்லாவிட்டால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியிருக்க முடியாது. நல்ல விஷயங்கள் நடக்கும்போது அவற்றை பாராட்ட வேண்டும். மோடி வலிமை மிக்க தலைவர்.
ராஜ் தாக்கரே
தலைவர்,
மஹா., நவநிர்மாண் சேனா

