'காவி சால்வை அணிந்தது ஏன்? ம.ஜ.த.,வுக்கு லலிதா நாயக் கேள்வி
'காவி சால்வை அணிந்தது ஏன்? ம.ஜ.த.,வுக்கு லலிதா நாயக் கேள்வி
ADDED : பிப் 04, 2024 11:01 PM

மைசூரு: ''ஜனதா தள அரசில் நான் அமைச்சராக இருந்தபோது, தேவகவுடா, தனது மதசார்பற்ற கொள்கைகளால் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தார். இப்போது, அவரது குடும்பத்தினர் காவி சால்வை அணிந்து வீதிக்கு வந்துவிட்டனர்,'' என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் லலிதா நாயக் தெரிவித்தார்.
மைசூரில், 'ஜாக்ருத கர்நாடக அமைப்பு' சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
குவெம்புவின் இலக்கியத்தை அனைவரும் படித்திருந்தால், இன்று மத கொடியை ஏற்றுவதற்கு முயற்சி செய்திருக்க மாட்டார்கள். இன்றைய அரசியல் முக்கியத்துவம் தொலைந்து விட்டது. மதசார்பற்ற மனப்பான்மையை வளர்க்காத நிலைக்கு மாறிவிட்டோம்.
ராமர் பட்டாபிஷேகத்தை பார்த்தோம். மோடியின் முடிசூட்டு விழாவை பார்ப்போம் என மடாபதி ஒருவர் கூறுகிறார். அப்படியானால், நாம் மீண்டும் மன்னராட்சிக்கு வருகிறோமா.
ஜனதா தள அரசில் நான் அமைச்சராக இருந்தபோது, தேவகவுடா, தனது மதசார்பற்ற கொள்கைகளால் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தார். இப்போது, அவரது குடும்பத்தினர் காவி சால்வை அணிந்து வீதிக்கு வந்துவிட்டனர்.
ம.ஜ.த.,வை கன்னட கட்சியாக ஆதரித்தோம். ஆனால், தற்போது அந்த பச்சை நிற சால்வையை உதறிவிட்டு, அதற்கு பதிலாக காவி சால்வை அணிந்துள்ளனர்.
வரும் நாட்களில் பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்து கொண்டு குமாரசாமி வெளியே வந்தாலும், ம.ஜ.த., தொண்டர்கள், வர மாட்டார்கள். அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

