டிராவிட் நீக்கம் ஏன்: ஏ.பி.டி வில்லியர்ஸ் பரபரப்பு கருத்து!
டிராவிட் நீக்கம் ஏன்: ஏ.பி.டி வில்லியர்ஸ் பரபரப்பு கருத்து!
ADDED : செப் 01, 2025 03:56 PM

புதுடில்லி: ''அதிக பணிச்சுமை கொடுக்க விரும்பிய அணி முடிவுக்கு ஒத்துக்கொள்ளாத காரணத்தினால் ராகுல் டிராவிட்டை ராஜஸ்தான் அணி வலுக்கட்டாயமாக நீக்கியது'' என தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்தார்.
இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் 52. பிரிமியர் அரங்கில் 2011ல் ராஜஸ்தான் அணியில் இணைந்தார். 2012-13ல் கேப்டன், 2014-15ல் ஆலோசகராக இருந்தார். அணியை ஒட்டு மொத்தமாக மாற்றி கட்டமைக்கும் வாய்ப்பை, டிராவிட் வசம் கொடுக்க, நிர்வாகம் முன்வந்தது. இதை ஏற்க மறுத்த டிராவிட், பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.
இது குறித்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கூறிய கருத்து பரபரப்பை கிளப்பி உள்ளது. அவர் கூறியதாவது: ராகுல் டிராவிட்டை வலுக்கட்டாயமாக ராஜஸ்தான் நிர்வாகம் அணியிலிருந்து நீக்கி உள்ளனர். அந்த முடிவு உரிமையாளர் அல்லது அணி நிர்வாகம் எடுத்தது போல் தெரிகிறது.
அதிக பணிச்சுமை கொடுக்க விரும்பிய அணி முடிவுக்கு ஒத்துக்கொள்ளாத காரணத்தினால் வலுக்கட்டாயமாக நீக்கினர். நமக்கு எதுவும் தெரியாது.
வருங்காலத்தில் டிராவிட் அதைப் பற்றி பேசும் போது நமக்கு உண்மைத் தெரியும். அவர் ராஜஸ்தான் அணியில் நிரப்புவதற்கு பெரிய இடத்தை விட்டுச் சென்றுள்ளார். மிகவும் நல்ல குணம் கொண்டவர் ராகுல் டிராவிட். அவர் கிரிக்கெட்டை பற்றி நிறைய தெரிந்தவர்.
இளம் வீரர்களிடம் அவரைப் பற்றி நான் நிறைய பேசி உள்ளேன். ராஜஸ்தான் அணி கொடுத்த மற்றொரு வேலையை டிராவிட் ஏற்க மறுத்துள்ளார். அதனால் ராஜஸ்தான் அவரை அணியிலிருந்து தூக்கி எறிந்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.