கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும்? கமல் சொன்ன பதில்!
கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும்? கமல் சொன்ன பதில்!
UPDATED : ஜூலை 24, 2025 09:51 AM
ADDED : ஜூலை 24, 2025 09:39 AM

சென்னை: ''அதை இப்பொழுது சொல்ல கூடாது. அங்கே தான் பேச வேண்டும்'' என கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பதில் அளித்தார்.
ராஜ்யசபா எம்.பி.,யாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நாளை (ஜூலை 25) பதவியேற்கிறார். இதற்காக டில்லி புறப்பட்டு சென்ற, கமல் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீங்கள் செய்தி சேகரிக்க மட்டும் வரவில்லை. என்னை வாழ்த்தி அனுப்பவும் வந்து இருப்பதாக நான் நினைத்து கொள்கிறேன்.
அதற்கு நன்றி. உங்களின் வாழ்த்துக்களுடன், மக்களின் வாழ்த்துக்களுடன் நான் உறுதிமொழி எடுக்கவும், எனது பெயரை பதிவு செய்யவும் செ ல்கிறேன். இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் மரியாதையையும், கடமையையும் நான் செய்ய போகிறேன். பெருமையுடன் சொல்லி கொள்கிறேன், வணக்கம். இவ்வாறு கமல் கூறினார்.
கேள்வியும், பதிலும்!
நிருபர்: கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும்?
கமல் பதில்: அதை இப்பொழுது சொல்ல கூடாது. அங்கே தான் பேச வேண்டும். சில விஷயங்கள் இங்கே பேசும் மாதிரி அங்கே பேச கூடாது. அங்கே பேசுகிற மாதிரி இங்கே பேச கூடாது.
நிருபர்: 6 ஆண்டு கால பயணம் எதை நோக்கி இருக்கும்?
கமல் பதில்: அங்கே தெரியும். எனது பயணத்தை கவனித்தீர்கள் என்றால், நல்லா புலப்படும்.