ஊழல்வாதிகளின் சொத்துகளை பறித்து ஏழைகளுக்கு வழங்குவோம்: மோடி அதிரடி பேச்சு
ஊழல்வாதிகளின் சொத்துகளை பறித்து ஏழைகளுக்கு வழங்குவோம்: மோடி அதிரடி பேச்சு
UPDATED : ஏப் 15, 2024 05:41 PM
ADDED : ஏப் 15, 2024 03:58 PM

திருவனந்தபுரம்: ''மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்ததும் ஊழல்வாதிகளின் சொத்துகளை பறித்து ஏழை மக்களுக்கு வழங்குவோம்'' என கேரளாவில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நேற்று மலையாள புத்தாண்டு தினமான விஷூ பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நல்ல நேரத்தில் கேரள மக்களின் ஆசிர்வாதங்களை பெற்றுள்ளேன். நேற்று பா.ஜ., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை என்றால் மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதத்தின் கீழ் இந்தியா உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மையமாக மாறும், விண்வெளித் துறையில் ககன்யான் போன்ற மறக்க முடியாத சாதனைகளை இந்தியா படைக்கும், விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மான் நிதி தொடர்ந்து கிடைக்கும்.


