
சுவாமி அவிமுக்தேஷ்வரானந்துடன் ஏற்பட்டுள்ள சர்ச்சை, உ.பி., மகர கும்பமேளாவில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதை காட்டுகிறது. குறுகிய நலன்களுக்காக, மதத்தையும் அரசியலையும் இணைக்கும் நடைமுறை ஆபத்து நிறைந்தது. இது, புதிய மோதல்களுக்கு வழிவகுக்கும். இந்த விவகாரத்தில் பரஸ்பர பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்.
மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்
கடனை தள்ளுபடி செய்யுங்கள்!
கேரளாவின் வயநாட்டில் உள்ள முண்டக்கை - சூரல்மலை பகுதி மக்கள் பேரிடரால் பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு அவர்களுக்கு எந்த உதவியும் வழங்கவில்லை. அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதுடன், பேரிடர் நிவாரண பணிகளுக்காக மாநிலத்திற்கு வழங்கிய கடன்களை மானியமாக மாற்ற வேண்டும்.
பிரியங்கா லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
ஜாமின் பெற உதவி!
சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் , மாநில அரசின் அழுத்தத்தால் சிறப்பு புலனாய்வு குழு இடைக்கால குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய வில்லை. இதனால், குற்றஞ்சாட்டப்பட்டோர் ஜாமினில் வெளியே வர வாய் ப்பை ஏற்படுத்துகிறது . அவர்கள் வெளியே வந்தால், ஆதாரங்களை சிதைக்க வாய்ப்புள்ளது.
வி.டி.சதீஷன் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், காங்.,

