சீனாவுடன் கடினமான சூழ்நிலையை கடந்துவிட்டோம்: ஜெய்சங்கர் பேச்சு
சீனாவுடன் கடினமான சூழ்நிலையை கடந்துவிட்டோம்: ஜெய்சங்கர் பேச்சு
ADDED : பிப் 10, 2024 04:43 PM

கன்பரா: 'சீனா உடன் கடினமான சூழ்நிலையை நாங்கள் கடந்துவிட்டோம்' என ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவில் பெர்த்தில் என்ற இடத்தில் இந்தியர்கள் மத்தியில், ஜெய்சங்கர் பேசியதாவது: கோவிட் காலத்திலும் இந்திய ராணுவத்தினர் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர். சீனா உடன் கடினமான சூழ்நிலையை நாங்கள் கடந்துவிட்டோம். அனைவருக்கும் தெரியும். 370வது சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டது. உக்ரைன் மோதலின் போது நாங்கள் அழுத்தத்திற்கு ஆளானோம்.
கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 8 புதிய விமான நிலையங்களை நாங்கள் கட்டியுள்ளோம். ஒவ்வொரு நாளும் 30 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 2 புதிய கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு வளர்ந்த நாட்டிலும் பின் தங்கிய மக்கள் உள்ளனர்.
கோவிட் காலத்தில் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்த போதும், நாங்கள் அலுவலகத்தில் இருந்து ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட்கள் வேலை செய்தோம். நாங்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதால் எளிதான முறையில் கோவிட் காலத்தை எதிர்கொண்டோம். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

