சேவைகள் குறைபாடு வோடாபோன் முதலிடம்: ஆய்வில் தகவல்
சேவைகள் குறைபாடு வோடாபோன் முதலிடம்: ஆய்வில் தகவல்
ADDED : டிச 29, 2025 02:37 AM

புதுடில்லி:மொபைல் சந்தாதாரர்கள் தங்கள் சேவை வழங்குநரிடம் புகார் தெரிவித்த போதிலும் அதனை கண்டுகொள்ளாத நிறுவனங்களின் வரிசையில் வோடா போன் நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு வழிகாட்டுதல்களை டிராய் பிறப்பித்து உள்ளது. இருப்பினும் அவைகள் சரியான
முறையில் செயல்படுகிறதா என்பதைகண்டறிய லோக்கல் சர்க்கிள் தளம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
இதற்காக நாடு முழுவதும் 349 மாவட்டங்களில் இருந்து 48 ஆயிரம் பேர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தளத்தில் தகவல் தெரிவிப்பவர்கள் தங்களது ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களது தகவல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் தகவல் கூறியவர்களில் 64 சதவீதம் பேர் ஆண்கள், 36 சதவீதம் பேர் பெண்கள்.
தகவலில் தெரிவித்து இருப்பதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் 65 சதவீதம் பேர் நெட்வொர்க் இணைப்புப் பிரச்சனை குறித்தும், 54 சதவீதம் பேர் தேவையற்ற அழைப்புகள் குறித்தும் 23 சதவீதம் பேர் கட்டணம் தொடர்பான புகார்களை கூறி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் 47 சதவீதம் பேர், தங்கள் புகார்கள் பெரும்பாலும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என கூறி உள்ளனர். இத்தகைய புகாரில் முதலிடத்தில் வோடாபோன் ஐடியா முதலிடத்திலும் அதனை தொடர்ந்து ஏர்டெல், ஜியோ போன்ற பெரியநிறவனங்களும் நுகர்வோர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படவில்லை,' என்று லோக்கல்சர்க்கிள்ஸ் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது

