மணிப்பூர் வடக்கு பகுதியில் வன்முறை: இரு கமாண்டோக்கள் கொலை
மணிப்பூர் வடக்கு பகுதியில் வன்முறை: இரு கமாண்டோக்கள் கொலை
UPDATED : ஜன 17, 2024 07:17 PM
ADDED : ஜன 17, 2024 07:01 PM

இம்பால்: மணிப்பூரின் வடக்கு மாவட்டத்தில் இன்று (17-ம் தேதி) நடந்த வன்முறை சம்பவத்தில் இரு போலீஸ் கமாண்டோக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு இரு தரப்பு பழங்குடியினரிடையேயான மோதல் வன்முறையாக வெடித்தது.
பழங்குடியின இளம் பெண் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்ட சம்பவம் நாட்டை அலற வைத்தது.இதை தொடர்ந்து மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.இன்று (17-ம் தேதி) மணிப்பூரின், வடக்கு மாவட்டமான இந்தியா-மியான்மரின் எல்லைப்பகுதி அருகே உள்ள மொரேக் என்ற இடத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் வன்முறை கும்பல் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்களில்ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் இரு போலீஸ் கமாண்டோ படையினர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.வன்முறை மேலும் பரவாமல் தடுக்க சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் விரைந்துள்ளனர்.

