ADDED : செப் 18, 2025 12:20 AM

ஜம்மு:ஜம்மு - காஷ்மீரில் உள்ள வைஷ்னோ தேவி கோவிலுக்கு பக்தர்கள் 22 நாட்களுக்கு பின் நேற்று மீண்டும் யாத்திரை சென்றனர்.
ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்னோ தேவி கோவிலுக்கு செல்லும் யாத்திரை கடந்த மாதம் 26ம் தேதி பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் 34 பேர் பலியாகினர், இதனால் யாத்திரை தடைப்பட்டது.
இந்நிலையில் கோவிலை நிர்வகிக்கும் மாதா வைஷ்னோ தேவி கோவில் வாரியம் நேற்று வானிலை சீரானதை அடுத்து மீண்டும் யாத்திரை துவங்கும் என அறிவித்தது.
இதையடுத்து மலைக்கோவிலுக்கு செல்லும் இரு வழிப்பாதையிலும் நேற்று காலை 6:00 மணி முதல் யாத்திரை துவங்கியது. கடந்த, 22 நாட்களாக முகாமில் காத்திருந்த பக்தர்கள் யாத்திரை புறப்பட்டனர். யாத்திரையின் போது பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என வாரியம் உத்தரவிட்டது.
நவராத்திரி காலமான, செப்., 22 - அக்., 1 வரை ஏராளமான பக்தர்கள் யாத்திரையில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.