sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

17வது குழந்தையை பெற்றெடுத்த தாய்; ராஜஸ்தானில் டாக்டர்கள் அதிர்ச்சி!

/

17வது குழந்தையை பெற்றெடுத்த தாய்; ராஜஸ்தானில் டாக்டர்கள் அதிர்ச்சி!

17வது குழந்தையை பெற்றெடுத்த தாய்; ராஜஸ்தானில் டாக்டர்கள் அதிர்ச்சி!

17வது குழந்தையை பெற்றெடுத்த தாய்; ராஜஸ்தானில் டாக்டர்கள் அதிர்ச்சி!

6


ADDED : ஆக 27, 2025 02:00 PM

Google News

6

ADDED : ஆக 27, 2025 02:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண் 55 வயதில் 17 வது குழந்தையை பெற்றெடுத்தார். நான்காவது குழந்தை என்று கூறி, மருத்துவமனையில் பிரசவத்துக்கு அந்த பெண் சேர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ரேகா கல்பெலியா. இவருக்கு வயது 55. இவரது கணவர் காவ்ரா கல்பெலியா. இவருக்கு நிரந்தர வேலை இல்லாததால் குப்பைகளை சேகரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் பிறந்துள்ளன.

5 குழந்தைகள் பிறந்த சில நாட்களில் உயிரிழந்து விட்டன. மீதமுள்ள குழந்தைகள் இவர்களுடன் வசித்து வருகின்றனர். அதில் 5 குழந்தைகளுக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது.இந்த சூழலில், ரேகா கல்பெலியா மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இவர் 55வது வயதில் 17வது குழந்தையை பெற்று எடுத்தாள். தாயும் குழந்தையும் நலமுடன் இருக்கின்றனர். இந்த பெண் பிரசவ வலியில் மருத்துவமனையில் அனுமதித்த போது டாக்டரிடம் நான்காவது குழந்தை பிரசவத்திற்கு வந்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

நிறைய கடன்

ஏற்கனவே வறுமையில் தவிக்கும் இந்த தம்பதியினர் தனது குழந்தைகளை வளர்ப்பதில் மிகவும் கஷ்டமான சூழலை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. மேலும் நிறைய கடன் உள்ளதால், இந்த தம்பதியினர் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். தாய் 17வது குழந்தையை பெற்று எடுத்தது குறித்து மகள் சீலா கல்பெலியா கூறியதாவது:

எங்கள் குடும்பம் அன்றாட வாழ்க்கையை கழிப்பதற்கு நிறைய போராட்டங்களை அனுபவித்து வருகிறது.
நாங்கள் அனைவரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறோம். எனது தாய்க்கு இவ்வளவு குழந்தைகள் இருப்பதை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைகின்றனர். எனது தாய், தந்தை இருவரும் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் எங்களை படிக்க வைக்க இயலவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

17 குழந்தைகளுக்கு தந்தையான காவ்ரா கல்பெலியா கூறுகையில், ''குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்கும், படிக்க வைப்பதற்கும் நிறைய கஷ்டங்கள் இருக்கிறது. குழந்தைகளை திருமணம் செய்து வைப்பதிலும் பண பிரச்னை இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொந்தரவுகளை அனுபவித்து வருகிறேன்,'' என்றார்.

ஜாடோல் சமூக சுகாதார மையத்தின் டாக்டர் ரோஷன் கூறுகையில், ரேகா அனுமதிக்கப்பட்டபோது, ​​இது அவரது நான்காவது குழந்தை என்று குடும்பத்தினர் எங்களிடம் கூறினர். பின்னர், இது அவரது 17வது குழந்தை என்பது தெரியவந்தது,' என்றார்.






      Dinamalar
      Follow us