மஹாராஷ்டிரா என்கவுன்டரில் பெண் மாவோயிஸ்டுகள் இருவர் சுட்டுக்கொலை
மஹாராஷ்டிரா என்கவுன்டரில் பெண் மாவோயிஸ்டுகள் இருவர் சுட்டுக்கொலை
ADDED : செப் 17, 2025 03:30 PM

கட்சிரோலி: மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் இன்று காலை போலீஸ் கமாண்டோக்கள் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பெண் மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டம் தனோரா தாலுகாவிற்கு உட்பட்ட நிஹல்காய் வனப்பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி இரவு முதல் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் போலீஸ் கமாண்டோக்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நடவடிக்கையால் இன்று பெண் மாவோயிஸ்ட்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து கட்சிரோலியின் கூடுதல் போலீஸ் அதிகாரி மகேந்திர பண்டிட் கூறியதாவது:
தனோரா தாலுகாவிற்கு உட்பட்ட நிஹல்காய் வனப்பகுதியில், கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் படைப் பிரிவான சி-60 கமாண்டோக்களுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே இன்று காலை 8.30 மணியளவில், அரை மணி நேரம் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. அதை தொடர்ந்து நடந்த தேடுதலின் போது, ஆயுதம் ஏந்திய இரண்டு பெண் மாவோயிஸ்ட்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு மகேந்திர பண்டிட் கூறினார்.