ADDED : அக் 30, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தார்: மத்திய பிரதேசத்தின் தார் மா வட்டத்தில் உள்ள சாகுர் அருகே பிதாம்பூர் பகுதியில் ரயில்வே பாலம் கட்டுமான பணி நடக்கிறது.
நேற்று காலை இரு கிரேன்கள் இரும்பு துாண்களை உயரே துாக்கி செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது ஒரு கிரேன் திடீரென அறுந்து, அவ் வழியே சென்ற லாரி மீது விழுந்தது. இதில் லாரியில் பயணித்த கல்யாண் பார்மர், 46, அபய் படிதர், 30, ஆகியோர் பலியாகினர்.
இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே பலியான இருவரின் உறவினர்கள், இழப்பீடு மற்றும் வேலை கேட்டு மோவ் - நீமுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கட்டுமான நிறுவனம் இறந்த இருவரின் குடும்பத்துக்கு தலா, 12 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது. மேலும் அவர்களது உறவினர்களுக்கு வேலை தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

