ADDED : செப் 02, 2025 12:09 AM

பீஹாரில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நடத்திய வாக்காளர் உரிமை யாத்திரை பொய்களால் நிரம்பியது. இதை மக்கள் நன்கு அறிந்து உள்ளனர். ராகுல் மற்றும் காங்கிரஸை அவர்கள் நம்ப தயாராக இல்லை. யாத்திரையில் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை இழிவுபடுத்தியதற்காக காங்கிரசார் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
கிஷன் ரெட்டி மத்திய அமைச்சர், பா.ஜ.,
டிராகன் முன் தலைகுனிவு!
எல்லை தாண்டிய பயங்கரவாத விவகாரத்தில் சீனா இரட்டை வேடம் போடுவதாக பல ஆண்டுகளாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி வந்திருக்கிறது. தற்போது சீனா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்கிடம், பயங்கரவாதத்தால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்டுஉள்ளது என கூறிஉள்ளார். இது சீனாவின் டிராகன் முன் இந்தியாவின் யானை தலை குனிவது ஆகாதா?
ஜெய்ராம் ரமேஷ் ராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்
ராணுவம் வந்தது ஏன்?
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெங்காலி பேசும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து போராட்டம் நட த்த, கொல்கட்டா மைதான் பகுதியில் மேடை அமைத்திருந்தனர். அதை ராணுவம் அகற்றியுள்ளது. இது குறித்து கொல்கட்டா போலீசிடம் ஆலோசிக்கவில்லை. ராணுவத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது.
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,