sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ.,விடம் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை: காங்., - எம்.பி., திக்விஜய் சிங் 'அந்தர் பல்டி'

/

பா.ஜ.,விடம் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை: காங்., - எம்.பி., திக்விஜய் சிங் 'அந்தர் பல்டி'

பா.ஜ.,விடம் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை: காங்., - எம்.பி., திக்விஜய் சிங் 'அந்தர் பல்டி'

பா.ஜ.,விடம் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை: காங்., - எம்.பி., திக்விஜய் சிங் 'அந்தர் பல்டி'

2


ADDED : டிச 29, 2025 12:07 AM

Google News

2

ADDED : டிச 29, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பாராட்டி கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் எம்.பி., திக்விஜய் சிங், “பா.ஜ.,விடம் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை,” என, பல்டி அடித்துள்ளார்.

காங்கிரசின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான திக்விஜய் சிங், சமீபத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தொடர்ந்து எதிர்ப்பேன்



அதில், 'சமூக - பொருளாதார பிரச்னையில் கவனம் செலுத்தும் நீங்கள், கட்சி மீதும் அக்கறை காட்ட வேண்டும். தற்போது, கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை. குறிப்பாக, கட்சிக்குள் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்' என, தெரிவித்திருந்தார். இதே கருத்தை தன் சமூக வலைதள பக்கத்திலும் திக்விஜய் சிங் பதிவிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை ஓய்வதற்குள், 1996ல் குஜராத் முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த சங்கர்சிங் வகேலா பதவியேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, சமீபத்தில் தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவேற்றியிருந்தார்.

பா.ஜ., உயர்மட்ட தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த திக்விஜய் சிங், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைமையை பாராட்டியிருந்தார். இந்த விவகாரமும் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை கையிலெடுத்த பா.ஜ., 'காங்கிரசில் ஒரே குடும்பம், பல காலமாக தலைமை பொறுப்பில் இருப்பதை திக்விஜய் சிங் அம்பலப்படுத்தியுள்ளார். இதற்கு ராகுல் பதில் சொல்வாரா' என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தொடர்ந்து எதிர்ப்பதாக திக்விஜய் சிங் தெரிவித்து உள்ளார்.

போராடுகிறேன்



இது குறித்து அவர் நேற்று கூறியுள்ளதாவது: இந்த விவகாரத்தில், நான் சொல்ல விரும்பியதை ஏற்கனவே கூறிவிட்டேன். அனைவரும், தயவுசெய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நான் 50 ஆண்டுகளாக காங்கிரசில் இருக்கிறேன். சட்டசபை, பார்லிமென்ட் என அனைத்து இடங்களிலும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராடி வருகிறேன்.

பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை நான் எப் போதும் எதிர்க்கிறேன். ஆர். எஸ்.எஸ்., - பா.ஜ.,வின் வலுவான நிறுவன கட்டமைப்பை மட்டுமே நான் பாராட்டினேன். அவற்றுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் மற்றும் ராகுலின் தலைமைக்கு எதிராக தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், இந்த விளக்கத்தை திக்விஜய் அளித்துள்ளார். இருப்பினும், கட்சிக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்து, காங்கிரஸ் கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சசி தரூர் ஆதரவு


திக்விஜய் சிங்கின் கருத்தை ஆதரித்து திருவனந்த புரம் தொகுதி லோக்சபா எம்.பி.,யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் கூறியதாவது: கட்சியில் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது; காங்கிரஸ் 140 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. அதிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். நம்மிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம். எந்த கட்சியிலும் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. ஒரு அமைப்பை வலுப்படுத்த இது, ஒரு பொதுவான இலக்காக இருக்க வேண்டும். காங்கிரஸ் வலுப்படுத்தப்பட வேண்டும் என திக்விஜய் சிங் விரும்புகிறார். நானும் அதையே விரும்புகிறேன். அவர் கூறியது போல், கட்சியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். அரசியல் சவால்களை திறமையாக எதிர்கொள்ள, உள் ஒழுக்கத்தையும், நிறுவன வலிமையையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us