காதலியை சூட்கேசில் மறைத்த மாணவன்; விடுதிக்குள் கொண்டு சென்றபோது சிக்கிய சம்பவம்
காதலியை சூட்கேசில் மறைத்த மாணவன்; விடுதிக்குள் கொண்டு சென்றபோது சிக்கிய சம்பவம்
UPDATED : ஏப் 12, 2025 01:33 PM
ADDED : ஏப் 12, 2025 01:30 PM

சோனிபட்: ஹரியானாவில் தனது காதலியை சூட்கேசில் மறைத்து விடுதிக்குள் கொண்டு சென்ற மாணவன் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
சோனிபட் பகுதியில் பிரபல பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர் ஒருவர் மிக பெரிய அளவிலான சூட்கேஸ் ஒன்றுடன் விடுதிக்குள் நுழைந்துள்ளார்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக, அவர் கொண்டு வந்திருந்த சூட்கேசை கண்டு விடுதி கண்காணிப்பாளருக்கு சந்தேகம் எழுந்தது. தமது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள சூட்கேசை திறக்க அவர் கூறி உள்ளார். மாணவரோ என்ன செய்வது தயங்கி நிற்கவே விடுதி ஊழியர்களை திறக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
அவர்களும் சூட்கேசை திறந்து பார்த்து ஒட்டு மொத்தமாக அதிர்ந்து போயினர். உள்ளே உயிருடன் ஒரு பெண் மடக்கி உட்கார்ந்து இருப்பதை கண்டனர். உடனடியாக அவரை சூட்கேசில் இருந்து வெளியே தூக்கிவிட்டனர்.
இந்த சம்பவத்தை விடுதியில் இருந்த மற்ற மாணவர்கள் தங்களின் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். வீடியோ வைரலாக, அதனுடன் மீம்களும் பறக்க ஆரம்பித்துள்ளன.

