sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 பக்தர்கள் வாகனங்களுக்கு வண்டிபெரியாறில் இடவசதி

/

 பக்தர்கள் வாகனங்களுக்கு வண்டிபெரியாறில் இடவசதி

 பக்தர்கள் வாகனங்களுக்கு வண்டிபெரியாறில் இடவசதி

 பக்தர்கள் வாகனங்களுக்கு வண்டிபெரியாறில் இடவசதி


UPDATED : டிச 06, 2025 07:45 AM

ADDED : டிச 06, 2025 02:13 AM

Google News

UPDATED : டிச 06, 2025 07:45 AM ADDED : டிச 06, 2025 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு வழியாக சபரிமலைக்கு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் அதிகம் செல்வர். அவர்கள் கடந்த சீசன் வரை வண்டிபெரியாறில் மினி ஸ்டேடிய மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு இளைப்பாறி சென்றனர். தற்போது ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்டதால் வாகனங்கள் நிறுத்த இயலாத நிலை ஏற்பட்டது.

அதனால் வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்து கொடுக்குமாறு வண்டிபெரியாறு ஊராட்சி செயலர் பிற்றிபினோய், ஹாரிசன் மலையாளம் தேயிலை கம்பெனி அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்த கம்பெனிக்கு சொந்தமான வாளார்டி எஸ்டேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி 44 ஆயிரம் சதுர பரப்பளவில் 300 வாகனங்கள் நிறுத்தும் வகையில் இடவசதி செய்து பயன்பாட்டுக்கு வந்தது.

அதனை வண்டி பெரியாறு இன்ஸ்பெக்டர் அம்ரித் ஷா சிங் நாயகம் துவக்கி வைத்தார். ஹாரிசன் மலையாளம் கம்பெனி கூடுதல் மேலாளர் பிஜோமானுவேல், சீனியர் மேலாளர் ஜெயபிரகாஷ், ஊராட்சி செயலர் பிற்றிபினோய், மோட்டார் வாகனத் துறை அதிகாரி கிஷோர் பங்கேற்றனர். வாகனங்கள் நிறுத்தும் இடத்தை மண்டல கால சீசன் முடியும் வரை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு கட்டணமாக சிறிய தொகை வசூலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புல்மேடு பாதையில் பஸ் வசதி


சபரிமலை: சத்திரம் - புல்மேடு பாதையில் வரும் சபரிமலை பக்தர்களுக்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் தொடர்ச்சியாக பஸ்களை இயக்குகிறது. வண்டிப்பெரியாறு -சத்திரம் - புல்மேடு பாதை, தமிழக பக்தர்களுக்கு வசதியானது. சபரிமலை சன்னிதானத்துக்கு வரும்போது செங்குத்தான இறக்கத்தில் வரவேண்டும். இவர்களுக்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் பஸ்களை இயக்குகிறது. வண்டிப்பெரியாறு பஸ் ஸ்டாண்டில் இருந்து தினமும் 16 முறை பஸ்கள் இயங்கும். அதிகாலை 5:30 மணிக்கு குமுளி டெப்போவில் இருந்து முதல் பஸ் புறப்படும். சத்திரத்தில் இருந்து கடைசி பஸ் மாலை 6:00 மணிக்கு புறப்படும். தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த 16 கி.மீ., துார ரோடு மிக குறுகியதும் பின் வளைவுகளை கொண்டதுமாக இருக்கிறது. இந்த துாரத்தை கடக்க 40 நிமிடம் ஆகிறது. தினமும் மதியம் 1:30 மணிவரை சத்திரத்தில் இருந்து புல் மேடு பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.








      Dinamalar
      Follow us