UPDATED : ஏப் 04, 2024 03:03 PM
ADDED : ஏப் 04, 2024 01:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்றுக் கொண்டார்.
லோக்சபா எம்.பி.,யாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உடல்நிலை காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை. ராஜ்யசபாவுக்கு செல்ல முடிவு செய்தார். ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், சோனியா இன்று( ஏப்.,04) ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


