வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை சேர்க்கணுமா? தேர்தல் கமிஷனர் ஆவேசம்
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை சேர்க்கணுமா? தேர்தல் கமிஷனர் ஆவேசம்
ADDED : ஜூலை 25, 2025 01:15 AM

புதுடில்லி:“இறந்தவர்களையும், வெளிநாட்டினரையும் பீஹார் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனுமதிக்க வேண்டுமா?,” என, எதிர்க்கட்சியினருக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பீஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
வா க்காளர் பட்டியலில் உரிய ஆவணங்களுடன் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும் இன்று கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிறுபான்மையினர்களின் ஓட்டுகள் நீக்க வாய்ப்பிருப்பதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்ற னர்.
இந்த விவகாரம் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் நேற்று கூறியதாவது:
வாக் காளர் பட்டியல் என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். இதில், போலி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களையும், வெளிநாட்டினரையும், இறந்தவர்களையும் சேர்க்க தலைமை தேர்தல் கமிஷன் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி யினர் விரும்புகின்றனரா?
அத்தகைய வாக் காளர்களை தேர்தல் கமிஷன் நீக்க வேண்டாமா? வெளிப்படையான செயல்மு றை வாயிலாக, உண்மையான வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் தயாரிக்கிறது.
இது நியாயமான முறையில் தேர்தல்களை நடத்துவதற்கும், வலுவான ஜனநாயகத்திற்குமான அஸ்திவார கல். இதில், தவறு நேர அனுமதிக்கலாமா?-
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.