காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார்
காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார்
UPDATED : ஆக 05, 2025 02:08 PM
ADDED : ஆக 05, 2025 02:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் உடல் நலக்குறைவால் இன்று (ஆகஸ்ட் 05) டில்லியில் காலமானார். அவருக்கு வயது,79.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்,79. இவர் உடல்நலக்குறைவு காரணமாக டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்து. அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.
ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட போது கவர்னராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் ஒடிசா, பீஹார், கோவா, மேகலாயா உள்ளிட்ட மாநிலங்களிலும் கவர்னராக பணியாற்றி உள்ளார்.
இவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.