ரூ.6 லட்சம் லஞ்சம்: டில்லியில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி உள்ளிட்ட 4 பேர் கைது
ரூ.6 லட்சம் லஞ்சம்: டில்லியில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி உள்ளிட்ட 4 பேர் கைது
ADDED : ஆக 12, 2025 09:55 PM

புதுடில்லி; பணி முடிக்கப்பட்டதற்கான 'பில்'களுக்கு ஒப்புதல் வழங்க ரூ. 6 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரி உள்ளிட்ட 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
டில்லியின் ஆர்கே புரம் பகுதியில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றும்மூத்த அதிகாரிக்கு ஒப்பந்ததாரர் ஒருவர் ரூ.6 லட்சம் லஞ்சம் கொடுக்க உள்ளதாக சிபிஐ அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரூ.1.52 கோடி மதிப்பிலான' பில்' லுக்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் கொடுக்க உள்ளதாக தகவல் வந்தது.
இதனையடுத்து, மூத்த பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் இடைத்தரகர் என 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக மூத்த அதிகாரி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடம் இருந்து தொடர்ச்சியாக லஞ்சம் வாங்கி வருவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.