ADDED : ஜன 24, 2026 05:56 AM

மரியாதை செலுத்த வேண்டும்!
மஹாத்மா காந்தியை எதிர்த்து சுபாஷ் சந்திரபோஸ் போராடவில்லை; மாறாக, காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அவரது போராட்டம் இருந்தது. இது, இந்தியர்களிடையே இன்றும் தேசபக்தி உணர்வை துாண்டுகிறது. நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அனைவருக்கும் ஒவ்வொரு இந்தியரும் மரியாதை செலுத்த வேண்டும். சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி
வங்காளிகளுக்கே பாதுகாப்பு இல்லை!
மேற்கு வங்கத்தில் வசிக்கும் வங்காளிகளுக்கே பாதுகாப்பு இல்லை; சுதந்திரப் போராட்டத்தில் வங்காளம் வழங்கிய தலைமைத்துவத்தை ஒருபோதும் மறக்க முடியாது. நாட்டிற்கு வழிகாட்டிய இம்மாநிலம், தவறான ஆட்சியால் நெருக்கடியில் உள்ளது. இவற்றில் இருந்து மீள, வரும் தேர்தலில், பா.ஜ.,வை வெற்றி பெற செய்ய வேண்டும். நட்டா மத்திய அமைச்சர், பா.ஜ.,
கவனம் செலுத்துங்கள்!
அமெரிக்காவின் வரிவிதிப்பால், நம் நாட்டின் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.5 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கும் சூழலில், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை, அந்நாட்டுடன் மேற்கொள்வது கட்டாயம். பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்

