ராஜ்யசபா எம்.பி.,யாக எல்.முருகன் உள்ளிட்டோர் பதவியேற்பு
ராஜ்யசபா எம்.பி.,யாக எல்.முருகன் உள்ளிட்டோர் பதவியேற்பு
UPDATED : ஏப் 03, 2024 01:43 PM
ADDED : ஏப் 03, 2024 01:42 PM

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட 12 பேர் இன்று (ஏப்.,3) பதவியேற்றனர்.
ராஜ்யசபாவில் உள்ள எம்.பி.,களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். அந்த வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 54 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதில் பா.ஜ.,வை சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கால்நடைத்துறை அமைச்சர் புருஷோத்தம் ருபாலா, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் முருகன் ஆகிய 7 அமைச்சர்களும் அடங்கும்.


