ராஜ்நாத் சிங் தலைமையில் பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு அமைப்பு
ராஜ்நாத் சிங் தலைமையில் பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு அமைப்பு
UPDATED : மார் 30, 2024 04:48 PM
ADDED : மார் 30, 2024 04:41 PM

புதுடில்லி: பா.ஜ.,வின் லோக்சபா தேர்தல் அறிக்கையை தயாரிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. கட்சிகள், வேட்பாளர் தேர்வு, பிரசாரம் என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழகத்தில், திமுக, அதிமுக, பாமக., உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளன.
இந்நிலையில் பா.ஜ.,வும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை நியமித்து உள்ளது. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளர் ஆக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் இடம்பெற்றுள்ளனர்.
27 பேர் கொண்ட இக்குழுவில்,
அர்ஜூன் முண்டா
பூபேந்திர யாதவ்
அர்ஜூன் ராம் மேவால்
கிரண் ரிஜிஜூ
அஸ்வினி வைஷ்ணவ்
தர்மேந்திர பிரதான்
பூபேந்திர படேல்
ஹிமாண்டா பிஸ்வா சர்மா
விஷ்ணு தியோ சாய்
மோகன் யாதவ்
சிவராஜ் சிங் சவுகான்
ஸ்மிருதி இரானி
ஜூவல் ஓரம்
ரவிசங்கர் பிரசாத்
சுஷில்மோடி
கேசவ் பிரசாத் மவுரியா
ராஜிவ் சந்திரசேகர்
வினோத் தாவ்தே
ராதா மோகன் தாஸ் அகர்வால்
மன்ஜிதர் சிங் சிர்சா
தன்கர்
அனில் ஆண்டனி
தாரிக் மன்சூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

