ADDED : பிப் 07, 2024 08:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்தார். தலைநகர் டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய போக்குவரத்தாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
இந்நிலையில் டில்லி மத்திய செயலக ரயில் நிலையத்திலிருந்து நேரு பிளேஸ் வரையிலான பேருந்து சேவையை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கொடியசைத்து துவக்கி வைத்தர்.
பின் இரு பகுதிகளிடையே இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலில் பயணித்தார். அவருடன் பள்ளி மாணவிகள் பயணித்தனர். அவர்களுடன் கலந்துரையாடினார். இதன் வீடியோ , புகைபடங்கள் வெளியாகியுள்ளன. திடீர் பயணம் குறித்த காரணம் தெரியவில்லை.
ஜனாதிபதியுடன் டில்லி மெட்ரோ ரயில் கழக மேலாண் இயக்குனர் விகாஸ் குமாரும் சென்றார்.

