கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ மகிழ்ச்சி
கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ மகிழ்ச்சி
UPDATED : டிச 13, 2024 04:03 PM
ADDED : டிச 12, 2024 03:56 PM

பெங்களூரு: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் சிஇ 20 இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது என இஸ்ரோ கூறியுள்ளது.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் நேற்று(டிச.,12) வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: விண்கலங்களை சுமந்து செல்லும் ராக்கெட்களில் கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தும் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
இது, இந்தியா அனுப்பிய ஆறு ராக்கெட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கும் இந்த இன்ஜின் தேர்வாகியுள்ளது.

இது மிகவும் முக்கியமான மற்றும் சிக்கலான சோதனை. கடல் மட்டத்தில் உள்ள வெப்பத்தை தாங்கும் திறன் போன்ற சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

