திரையுலகில் உங்கள் பயணம் சிறப்புமிக்க அனுபவம்: நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
திரையுலகில் உங்கள் பயணம் சிறப்புமிக்க அனுபவம்: நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ADDED : ஆக 15, 2025 09:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: திரையுலகில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது;
சினிமா உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது பயணம் ஒரு சிறப்புமிக்க அனுபவம்.
அவரது மாறுபட்ட வேடங்கள் தலைமுறை, தலைமுறையாக மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தமது வாழ்த்தில் கூறியுள்ளார்.