தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தவறாக நடக்கவில்லை!

தவறாக நடக்கவில்லை!

தவறாக நடக்கவில்லை!


ADDED : பிப் 13, 2026 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 12:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லோக்சபா சபாநாயகர் அறையில் காங்., எம்.பி.,க்கள் யாரும் தவறாக நடக்கவில்லை. ஒரு சில எம்.பி.,க்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். நான் அவர்களை துாண்டிவிட்டு அமைதி காத்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுவது பொய். இந்த விவகாரம் குறித்து அமைதியான முறையில் என் கருத்துகளை சபாநாயகரிடம் எடுத்துரைத்தேன்.

பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்.,

புரிந்து கொள்ளவில்லை!


அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம், நம் நாட்டிற்கு மிகவும் முக்கியம்; இது இடைக்கால ஒப்பந்தம். இதற்கும், எப்ஸ்டீன் கோப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மடுவை, மலையாக்கும் பணியை ராகுல் மேற்கொண்டுஉள்ளார். அவர், வர்த்தக ஒப்பந்தத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர் நல்ல ஆலோசகரை வைத்து கொள்ள வேண்டும்.

ஹர்தீப் சிங் புரி மத்திய அமைச்சர், பா.ஜ.,

தொழிற்சங்கங்களால் பாதிப்பு!


கேரளாவின் நற்பெயர், தொழிற்சங்கங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் போராட்டங்களால், முதலீட்டாளர்கள் விரும்பும் இடமாக கேரளா இல்லை. அரசின் கொள்கைகளுக்கு எதிராக தங்கள் போராட்டங்களை, ஆக்கப்பூர்வமான வழிமுறைகளில் வெளிப்படுத்த வேண்டும். பொது முடக்கம், மக்களின் சுதந்திரம் மீதான தாக்குதல்.

சசி தரூர் லோக்சபா எம்.பி., - காங்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us