நவ., இரண்டாம் வாரம் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: வானிலை மையம் கணிப்பு
நவ., இரண்டாம் வாரம் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: வானிலை மையம் கணிப்பு
UPDATED : நவ 01, 2024 08:12 PM
ADDED : நவ 01, 2024 07:08 PM

புதுடில்லி: ''நவம்பர் இரண்டாவது வாரத்தில் வட கிழக்குபருவமழை தீவிரம் அடையும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், குளம் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் மொஹபத்ரா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:காலை 08:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் , அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி எஸ்டேட்டில் 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இன்று தமிழகம், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும். நவம்பர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும். தென் மாநிலங்களில் இயல்பை விட 23% அதிகம் மழை பெய்யும். இவ்வாறு வானிலை மைய இயக்குநர் கூறியுள்ளார்.
தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ளது.

