ADDED : ஏப் 17, 2026 01:29 AM

பிளவுபடுத்த முயற்சி! மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை இணைப்பதன் வாயிலாக, நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் மத்திய பா.ஜ., அரசு ஈடுபட்டுள்ளது. இதன் வாயிலாக, வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு! வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களை அசாம், திரிபுரா அரசுகள் அனுமதிப்பதில்லை. அந்நாட்டை ஒட்டிய நம் எல்லையில் வேலி அமைக்க மேற்கு வங்க அரசு மறுத்துள்ளது. இதன் வாயிலாக, ஊடுருவல்காரர்களுக்கு அம்மாநிலத்தில் மம்தா ஆதரவு அளிக்கிறார். இதனால், அங்கு வங்கதேச முஸ்லிம் கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,
ஹிந்துக்களுக்கு முன்னுரிமை! கார்ப்பரேட் நிறுவனங்களில் மதமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேலைவாய்ப்பு ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இதை தடுக்க, வேலை வாய்ப்பி ல் ஹிந்துக்களுக்கு முன்னுரி மை அ ளிக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால், அவர்களை மட்டுமே பணியில் அமர்த்தும் கொள்கையை நிறுவனங்கள் அமல்படுத்த வேண்டும். அப்போதுதா ன், ஹிந்துக்களின் நலன் பாதுகாக்கப்படும். நிதேஷ் ரானே மஹாராஷ்டிரா அமைச்சர், பா.ஜ.,
