UPDATED : டிச 31, 2025 06:56 AM
ADDED : டிச 31, 2025 06:53 AM

கூட்டாட்சிக்கு எதிரானது! பார்லி.,யில் நீண்ட விவாதத்திற்கு பின், 'விபி ஜி ராம் ஜி' மசோதா நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டது. இதற்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் இயற்றிய சிறப்பு தீர்மானம், கூட்டாட்சி அமைப்பின் கொள்கைக்கு எதிரானது. இது, அரசியலமைப்பு சட்டக் கொள்கைகளை பலவீனப்படுத்துகிறது. சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஓட்டு வங்கிக்காக நிராகரிப்பு! அசாம், திரிபுரா மாநிலங்களில் சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நிலையில், மேற்கு வங்க அரசு, ஊடுருவல்காரர்களை வரவேற்கிறது. வங்கதேச எல்லையை ஒட்டி பாதுகாப்பு வேலி அமைக்கும் மத்திய அரசின் யோசனையையும் ஓட்டு வங்கிக்காக மம்தா நிராகரித்துள்ளார். ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,
சட்ட நடவடிக்கை பாயும்! கர்நாடகாவின் கோகிலு பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம். இருப்பினும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வீடு வழங்கப்பட உள்ளது. முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சட்ட விரோதமாக ஆக்கிரமிப்போ ர் மீது நடவடிக்கை பாயும். சிவகுமார் கர்நாடக துணை முதல்வர், காங்கிரஸ்

