
வேட்பாளர்களால் தோல்வி!
ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க நல்ல வாய்ப்பு இருந்தது. பலரும் அதற்காக உழைத்தனர். 25 சிட்டிங் அமைச்சர்களில், 17 பேர் தோற்றுப் போயினர். வேறு வேட்பாளர்களை தேர்வு செய்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்.
சச்சின் பைலட்
முன்னாள் துணை முதல்வர்,
காங்கிரஸ்
பிரதமரை பின்பற்றுங்கள்!
டில்லி மதுபான கொள்கை ஊழல் மிகப் பெரியது. இந்த வழக்கு விசாரணையை முதல்வர் கெஜ்ரிவால் புறக்கணிக்கிறார். விசாரணைக்கு ஆஜராக மறுக்கிறார். குஜராத் கலவரம் தொடர்பான விசாரணையில் பிரதமர் மோடி, 12 மணி நேரம் பதிலளித்தார். அவரை பின்பற்றுங்கள்.
மீனாட்சி லேகி
மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,
எதிர்க்கட்சிகளுக்கு குறி!
பா.ஜ., ஆட்சிக்கு வந்த 2014க்கு பின் அமலாக்கத்துறை விசாரணை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதே சமயம் தண்டனை விகிதம் 3 சதவீதமாக உள்ளது. அமலாக்கத்துறை வழக்குகளில், 97 சதவீதம் எதிர்க்கட்சியினர் மீது பதிவாகி உள்ளன.
பிரியங்கா சதுர்வேதி
ராஜ்யசபா எம்.பி., -
சிவசேனா உத்தவ் அணி

