ADDED : டிச 16, 2025 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறில் வழக்கத்தை விட முன்கூட்டியே நேற்று உறைபனி ஏற்பட்டது.
மூணாறில் ஆண்டு தோறும் நவம்பரில் குளிர் காலம் துவங்கி விடும். இந்தாண்டு வட கிழக்கு பருவ மழை, 'டிட்வா' புயல் ஆகியவற்றால் டிசம்பர் முதல் வாரம் வரை மழை பெய்தது. டிச.9 முதல் வெயிலும், காலை வேளையில் கடும் குளிரும் நிலவி வருகிறது.
மூணாறு, செண்டுவாரை எஸ்டேட் பகுதிகளில் நேற்று காலை வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் பதிவான நிலையில் அப்பகுதியில் உறைபனி ஏற்பட்டது. அதேபோல் மூணாறு அருகில் உள்ள லெட்சுமி எஸ்டேட் 4, சிவன்மலை எஸ்டேட் 5 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை பதிவானது. 2022ல் டிச.30ல் உறைபனி ஏற்பட்ட நிலையில், 2023ல் உறைபனி ஏற்படவில்லை. கடந்தாண்டு டிச.24ல் உறைபனி ஏற்பட்ட நிலையில், இந்தாண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே உறைபனி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

