பணம் இருந்தா மட்டும் பதக்கம் கிடைச்சுடுமா; கேட்கிறார் அபினவ் பிந்த்ரா
பணம் இருந்தா மட்டும் பதக்கம் கிடைச்சுடுமா; கேட்கிறார் அபினவ் பிந்த்ரா
UPDATED : ஆக 12, 2024 10:19 AM
ADDED : ஆக 12, 2024 09:45 AM

புதுடில்லி: 'வெறும் பணத்தால் மட்டும் பதக்கங்கள் கிடைத்து விடாது; ஒலிம்பிக் போட்டி, பொருள் விற்பனை இயந்திரம் அல்ல' என ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தெரிவித்தார்.
இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். அபினவ் பிந்த்ராவுக்கு பதவி வழங்கப்பட்ட நிலையில், இந்தியாவால் தங்கப்பதக்கம் வாங்க முடியாதது குறித்து அவர் கூறியதாவது:
பணம் இருந்தா போதாது!
பணத்தால் பதக்கங்கள் கிடைக்காது. இது விற்பனை இயந்திரம் அல்ல. விளையாட்டு வீரர்களுக்கு பணம் செலவழிப்பதை நிறுத்த வேண்டும் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. ஒலிம்பிக் போட்டி என்பது மிகவும் கடினமானது. பதக்கம் வெல்ல முடியாமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. திறமை கிட்டத்தட்ட குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறது.
விளையாட்டு வீரர்கள்
இந்திய விளையாட்டு வீரர்கள் ஏன் பின்தங்கினர் என்பற்கு என்னிடம் பதில் இல்லை. நாங்கள் இன்னும் நிறைய தங்க பதக்கங்களை வெல்ல முடியும் என கூறுவேன். என்னை பொறுத்தவரை சிறப்பாக செயல்பட மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த ஒலிம்பிக்கில் நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். வினேஷ் போகத் விவகாரத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடி கொண்டு இருக்கிறோம்.
பெருமை
நீரஜ் சோப்ரா செய்திருப்பது நம்பமுடியாத சாதனை. பாகிஸ்தான் வீரர் தகுதியான வெற்றியாளர். அதேநேரத்தில் நாம் அனைவரும் நீரஜ் சோப்ரா பற்றி மிகவும் பெருமைப்பட வேண்டும். தங்கம் பதக்கம் கிடைக்காமல் ஏமாற்றம் கிடைத்துள்ளது.இது பரவாயில்லை.ஏனெனில் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை அப்படித்தான். இவ்வாறு அவர் கூறினார்.

