ADDED : நவ 15, 2024 11:33 PM

எதிர்க்கட்சிகள், ஜாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்துகின்றன என்று, பிரதமர் மோடி பேசியுள்ளார். அவர் சொல்வது மிகவும் நியாயமற்றது. கடந்த சில நாட்களாக அவர் ஆற்றிய உரைகளையும், அரசியல் நலன்களுக்காக அவர் முன்வைக்கும் விஷயங்களையும் பார்த்தால், யார் பிளவுபடுத்துவது என்பது புரியும்.
சரத் பவா, தலைவர், சரத் பவார், தேசியவாத காங்.,
ரூ.10 லட்சம் கோடி கடன்!
முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசின் கீழ் பெறப்பட்ட 9.74 லட்சம் கோடி ரூபாய் கடன் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆராய்ந்தால் இந்த கடன் அளவு உயரக் கூடும். யாரேனும் இதை மறுத்தால், அவர்கள் தாராளமாக வந்து கணக்குகளை பார்க்கலாம்.
சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வர்,தெலுங்கு தேசம்
கோடீஸ்வரர்களுக்கான பிரதமர்!
பிரதமர் மோடி, ஏழைகளின் செலவில் கோடீஸ்வரர்களின் நலன்களுக்காக பணியாற்றுகிறார். மஹாராஷ்டிராவில் நிலங்களை அபகரிப்பதற்காகவே உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. மேலும், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மும்பை தாராவி நிலத்தை தொழிலதிபர்களுக்கு தர முயற்சிக்கிறார் பிரதமர்.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்,காங்கிரஸ்

