ADDED : ஏப் 30, 2026 01:25 AM

புதுடில்லி: இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர், ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
டில்லி உத்தம் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி நிஜாமுதீன் மற்றும் முஹமது சமீர் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சுமித் மற்றும் நிகில் ஆகிய இருவரை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணை அடிப்படையில், ஆகாஷ், 24, என்பவரை தேடி வந்தனர்.
தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பியாவரில் ஆகாஷ் நடமாட்டம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.
ராஜஸ்தான் விரைந்த டில்லி தனிப்படை போலீசார், உள்ளூர் போலீஸ் உதவியுடன் ஆகாஷை நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர்.
தனிப்பட்ட விரோதம் கூட்டாளிகளுடன் சேர்ந்து, நிஜாமுதீன் மற்றும் முஹமது சமீர் ஆகிய இருவரையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். டில்லி அழைத்து வரப்பட்ட ஆகாஷிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.
