தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ மோடி படத்தை அவதுாறாக சித்தரித்தவர் பிடிபட்டார்

 மோடி படத்தை அவதுாறாக சித்தரித்தவர் பிடிபட்டார்

 மோடி படத்தை அவதுாறாக சித்தரித்தவர் பிடிபட்டார்


ADDED : மார் 22, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அவதூறு செய்யும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.

பீஹார் மாநிலம் அர்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் சித்தநாத் குமார். பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.,வை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ., மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண் அரசியல் கட்சித் தலைவர் ஆகியோர் படங்களை, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அவதுாறாக சித்தரித்து உருவாக்கினார். அந்தப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

இதற்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து ஆய்வு செய்த டில்லி மாநகர போலீசின் சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சித்தநாத் குமார் இருப்பிடத்தை அறிந்தனர். தனிப்படை போலீசார் பீஹார் சென்றனர். சித்தநாத் குமாரை கைது செய்து டில்லி அழைத்து வந்தனர்.

டில்லி லோதி காலனியில் உள்ள சிறப்பு பிரிவு அலுவலகத்தில் சித்தநாத்திடம் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us